மேலும் செய்திகள்
இரு தரப்பினர் இடையே மோதல்
10-May-2025
மேட்டூர்: கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி மணக்காட்டை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 60. இவரது அண்ணன்கள் குப்பு-சாமி, பொன்னுசாமி, சின்னசாமி. இந்த, 4 பேருக்கு, 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.அதை பிரிப்பது தொடர்பாக, 4 குடும்பத்தினர் இடையே தகராறு நடந்து வருகிறது. இந்நிலையில் சின்னசாமியின், 2 அடி நிலத்தை சேர்த்து, குப்புசாமி வேலி போட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேற்று காலை, 9:30 மணிக்கு, சின்னசாமி நிலம் அருகே சென்ற குப்புசாமியிடம், பழனியப்பன் கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் குப்புசாமி மகன் முனியன், அவரது மகன்கள் சுரேஷ், 22, அரசு, 20, ஆகியோர் பழனியப்பனை தாக்கினர். குப்புசாமிக்கும் காயம் ஏற்பட்டது. பழனியப்பன், குப்புசாமி ஆகியோர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேட்டூர் போலீசார் சுரேஷ், அரசுவை கைது செய்து, முனியனை தேடுகின்-றனர்.
10-May-2025