உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 பேருக்கு குண்டாஸ்

2 பேருக்கு குண்டாஸ்

2 பேருக்கு குண்டாஸ்சேலம்:சேலம், அழகாபுரம் பெரியபுதுாரை சேர்ந்தவர் சக்திவேல். கடந்த மார்ச், 18ல், வீராணம், கோராத்துப்பட்டி மேட்டுக்காட்டை சேர்ந்த கார்த்திகேயன், 33, என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்துச்சென்றார். அழகாபுரம் போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.அதேபோல் ஆட்டையாம்பட்டி, வீரப்பன் தெருவை சேர்ந்த மணிகண்டன், 30, என்பவர், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாரிடம், மார்ச், 25ல், 5,000 ரூபாயை பறித்தார். இதனால் ஆட்டையாம்பட்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவை யில் உள்ளதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ