கஞ்சா விற்பனை வாலிபருக்கு குண்டாஸ்
சேலம், சேலம், அன்னதானப்பட்டி செல்லக்குட்டி காடு, குண்டு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 42. இவர் கடந்த அக்.,10ல் தாதகாபட்டி வாட்டர் டேங்க் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார், அவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், ஏற்கனவே கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், 2024ல் போதை பொருள் நுண்ணறிவு போலீசாரால், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்து, 14.95 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சண்முகத்தை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை கமிஷனர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா சிபாரிசு செய்தார். இதன் அடிப்படையில், மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.