உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்டில், கடந்த, 22ல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, வெங்கட்ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், சாமிநாதபுரத்தை சேர்ந்த கேசவன், 49, என்பவரிடம் இருந்து, கஞ்சா பாக்கெட்டுகளை விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதனால் கேசவனை கைது செய்து விசாரித்தனர். அப்போது, வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கிவந்து, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்றது கண்டறியப்பட்டது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்தன. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை