உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிபன் பாக்ஸை கழுவிய மாணவியர் வீடியோவால் ஹெச்.எம்., இடமாற்றம்

டிபன் பாக்ஸை கழுவிய மாணவியர் வீடியோவால் ஹெச்.எம்., இடமாற்றம்

இடைப்பாடி, தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை, மாணவியர் கழுவியதாக வீடியோ வெளியானது. இதுகுறித்து விசாரித்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்தனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டியில், நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு, எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் உள்பட, 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஜெயக்குமார், மதிய உணவு கொண்டு வந்த டிபன் பாக்ஸை, மாணவியர் கழுவிய வீடியோ பரவியது. இதுகுறித்து மற்ற ஆசிரியர்களிடம் கேட்டபோது, 'இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது ஜெயக்குமார் கொண்டு வந்த உணவை, அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், மாணவியர் சாப்பிடட்டும் எனக்கூறி கொடுத்தார். அப்போது அந்த மாணவியர், உணவை சாப்பிட்டு விட்டு, டிபன் பாக்ஸை கழுவி கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது பரவியுள்ளது' என்றனர். இருப்பினும் கல்வித்துறை அலுவலர்கள் விசாரித்தனர். பின், ஜெயக்குமாரை, அருகே உள்ள ஆலச்சம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்து, தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை