இ.பி.எஸ்.,சிடம் கைகோர்த்தால் கோட்டையில் கால் பதிக்கலாம்
பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க.,வின், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயல் வீரர் ஆலோசனை கூட்டம் நெய்க்காரப்பட்டியில் நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் வர-வேற்றார். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து பேசுகையில், ''2026ல், இ.பி.எஸ்., முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. கிளை செயலர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்த கூட்டணியும் தேவையில்லை,'' என்றார்.மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலர் பரமசிவம் பேசுகையில், ''எந்த கட்சியாக இருந்தாலும், இ.பி.எஸ்., உடன் கை கோர்த்தால் தான் கோட்டையில் கால்பதிக்க முடியும்,'' என்றார். இதில் சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி செயலர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார், மல்லுார் அம்மா பேரவை செயலர் பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயல்வீரர் கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்தது. அதில் ஒன்றிய செயலர் பாலச்சந்திரன், துணை செயலர் குணசீலன், நகர செயலர் சின்னதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.