விதிமீறி கோவில் கட்ட நடவடிக்கை
இடைப்பாடி: நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன் விதிமீறி கோவில் கட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை ஒட்டி இடைப்பாடி - சங்ககிரி சாலை உள்ளது. அச்சாலை ஓரம் விநாயகர் கோவில் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் அச்சாலை இரு வழிச்சாலையாக மாறினால் கோவிலை இடிக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட சூழல் உள்ள நிலையில் கோவில் கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசு அனுமதி பெற்றுள்ளனரா, எந்த நிதியில் கட்டப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, ''இந்த இடம், இதற்கு முன் சுடுகாடாக இருந்ததாம். வாஸ்துக்காக தான் கோவில் கட்டப்படுகிறது.இதற்கான செலவை ஒப்பந்ததாரர்கள் ஏற்று செய்கின்றனர்,'' என்றார்.