ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தலைவாசல், தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் அருள்குமார் கொடியேற்றி, 'இக்கால மாணவர்கள் அறிவாற்றலை வளர்த்து வீடு, நாட்டுக்கு பயன்தரும்படி செயல் புரிய வேண்டும்' என்றார்.செயலர் செல்வராஜு பேசுகையில், ''அனைவரும் நாளைய இந்தியாவின் உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்களாக வளர வேண்டும்,'' என்றார். பொருளாளர் பிரபா பேசுகையில், ''எதிர்காலத்தில் நம் தேசம் காத்த தலைவர்கள், காந்தி, கொடிகாத்த குமரன் உள்ளிட்டோரின் வழியில் மாணவர்கள் தேசப்பற்றுடன் கடமைகளை செய்ய வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு, சிலம்பம், பிரமிட், யோகா, ஸ்கேட்டிங் போன்ற நிகழ்ச்சிகளும், கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள், நடனம், நாடகங்கள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, நிர்வாகத்தினர், இயக்குனர்கள், பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். கல்வி குழு ஆலோசகர்கள் இளையப்பன், லஷ்மி நாராயணன், பழனிவேல், பள்ளி இயக்குனர் தங்கவேல், சிவாஜி, ராஜேஸ்வரி, முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.