உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓமலுார்: யு.ஜி.சி., அறிவிப்பு நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் பெரியார் பல்கலை முன், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பவித்ரன் தலைமை வகித்தார். அதில் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவுக்கு, யு.ஜி.சி., புது வழிகாட்டுதல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக கோஷம் எழுப்பினர். மாநில தலைவர் சம்சீர் அகமது, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து, யு.ஜி.சி., அறிவிப்பு நகலை எரித்தனர். கருப்பூர் போலீசார் தடுத்து, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !