இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வாழப்பாடி:வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், கடந்த பிப்ரவரி முதல் வாரம் இடமாறுதலில் சென்றார். இதனால், அப்பணியிடம் இரண்டரை மாதமாக காலியாக இருந்தது.இந்நிலையில் கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த வேல்முருகன், வாழப்பாடி இன்ஸ்பெக்டராக இடமாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம், ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.