மேலும் செய்திகள்
கோடையிலே மல்லிகைப்பூ மணக்குதே...
04-May-2026
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பள்ளிதெருப்பட்டி, களரம்பட்டி, பெரமனுார், காளியாகோவில்புதுார், வாழக்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அச்செடிகளில் உள்ள இலைகள் பசுமை இழந்து வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறியுள்-ளது. சித்திரை, வைகாசி பட்டத்தில் கோடை மழையால், மானாவாரி உற்பத்தி இருக்கும். ஆனால் மஞ்சள் நிறமாக மாறிய செடிகளில் புது அரும்பு, மொக்கு இல்லாமல் காணப்படுகின்றன. மகசூல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி-ணைப்பாளர் விஜயன் கூறியதாவது:ஒரு வகை சத்து பற்றாக்குறையால் செடிகள் நிறமாற வாய்ப்புள்-ளது. தேவையான நுண்ணுாட்டம் அளிக்க வேண்டும். அதற்கு மண்பரிசோதனை செய்து அதன்படி நுண்ணுாட்டம் வழங்கினால் செடிகள் பசுமைக்கு திரும்பி மகசூல் கொடுக்கும். விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
04-May-2026