உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விலக்குக்கு மட்டும் தேசியமா? புதிய தமிழகம் கட்சி தலைவர் கேள்வி

மது விலக்குக்கு மட்டும் தேசியமா? புதிய தமிழகம் கட்சி தலைவர் கேள்வி

சேலம்: புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி, சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:இட ஒதுக்கீட்டில் முன்னோடி என சொல்லிக்கொள்ளும், தி.மு.க., தன்னை, 'திராவிட மாடல் அரசு' என சொல்லி கொள்வதில் உண்மை இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது கூட, இட ஒதுக்கீடு விவகாரத்தில் உண்மை, நேர்மை, வெளிப்படையாக, தி.மு.க., நடந்து கொள்ளவில்லை.அரசின் அனைத்து துறைகளிலும் உயர் பதவியில் உரிய இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உள் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு மட்டும் அரசு, முன்னுரிமை அளித்துள்ளது.சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, தி.மு.க.,வினர் பேசுவர். தேசிய கல்வி கொள்கையை நிறைவேற்றுவதில் மாநில அரசு தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை. மது விலக்குக்கு தேசியத்தை தேடும், தி.மு.க., கல்விக்கு தேடக்கூடாதா? மாநில அரசுக்கு நிதி வேண்டுமானால் மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை