மேலும் செய்திகள்
பெத்தாங் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு
25-Jul-2025
இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள யுனிவர்சல் பப்ளிக் ஸ்கூலில், சோ- கியோகுஷின் மற்றும் தமிழ்நாடு கியோகுஷின் சின்னுஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில், கராத்தே திறன் தேர்வு போட்டி நடந்தது. இடைப்பாடி, வெள்ளரிவெள்ளி, செட்டிப்பட்டி, பூலாம்பட்டி, சித்துார், மேச்சேரி, மேட்டூர், சேலம், கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமையை வெளிப்படுத்தினர். அசோசியேஷன் தலைவர், யுனிவர்சல் பள்ளி தாளாளர் சீனிவாசன், தமிழக தலைமை பயிற்சியாளர் சின்னசாமி ஆகியோர், தேர்வானர்களின் தகுதிக்கேற்ப மஞ்சள், நீலம், ஆரஞ்சு, கருப்பு பெல்டுகள், சான்றிதழ்களை வழங்கினர். ஆலோசகர் மஞ்சுநாதன், பயிற்சியாளர்கள் கோகுல், செல்வமுருகன், ரஞ்சித்குமார், மோகன்ராஜ், பெற்றோர் பங்கேற்றனர்.
25-Jul-2025