கேதார கவுரி விரதம் பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
சேலம், தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை தினத்தில், சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கும் 'கேதார கவுரி' விரதம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, கயிறு, பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என, சுமங்கலி பெண்கள் பார்வதி தேவியை வேண்டிக்கொண்டு, கேதார கவுரி விரதம் இருப்பர். இதையொட்டி, சேலம் கடைவீதியில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், கவுரி விரதத்துக்கான நோன்பு கயிறுகள், 15 முதல் 50 ரூபாய் வரை பல வண்ணங்களில் விற்பனைக்கு குவிந்துள்ளது. பெண்கள் நோன்புக்கு தேவையான விரலி மஞ்சள், குங்குமம், தாலி கயிறுகள், குங்கும சிமிழ்கள், ரவிக்கை துண்டுகள், வெற்றிலை பாக்கு, பழம், நோன்பு கயிறுகள், மாவிலை, வாழை மரக்கன்றுகளை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர்.