உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபாவளி சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி: கேரள தம்பதிக்கு வலை

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி: கேரள தம்பதிக்கு வலை

சேலம், தீபாவளி சீட்டு நடத்தி, 25 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான கேரள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ், 32. இவர், சேலம், கருப்பூர் அருகே சாமிநாயக்கன்பட்டி, மாங்குப்பையில் வசித்து, மூலக்கடையில் மொபைல் போன் கடை, காமநாயக்கன்பட்டியில் 'பேன்ஸி ஸ்டோர்' நடத்தினார். மனைவி மரியமும், கடையை கவனித்து வந்தார். இரு ஆண்டாக, தம்பதியர் தீபாவளி சீட்டு நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த பலரும், 1,000 முதல், 10,000 ரூபாய் வரை சீட்டு கட்டி வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கிய நேரத்தில், ரமேஷ், மரியம், வீட்டை காலி செய்துவிட்டு மாயமாகினர். பணம் கட்டியோர் அதிர்ச்சியடைந்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், 25 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. பின் வழக்குப்பதிந்த போலீசார், தம்பதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ