உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிடா ஆடு திருட்டு; போலீசார் விசாரணை

கிடா ஆடு திருட்டு; போலீசார் விசாரணை

தலைவாசல், சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமு, 56. இவர், 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலை, 6:30 மணியளவில், வீட்டின் அருகில் கட்டியுள்ளார். நேற்று காலை ஆடு கட்டியிருந்த இடத்தில், 40 கிலோ எடை கொண்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 'கிடா' ஆடு காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆடு திருடிய மர்ம நபரை கண்டறிந்து, கிடா ஆட்டை மீட்டுத்தர வேண்டும் என, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை