உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூட்டையில் மதுபாட்டில் கடத்தியவருக்கு காப்பு

மூட்டையில் மதுபாட்டில் கடத்தியவருக்கு காப்பு

ஆத்துார்:தலைவாசல் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'பஜாஜ் - பல்சர்' பைக்கில் மூட்டையுடன் சென்றவர், போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றார். அந்த நபரை, விரட்டிச்சென்று பிடித்து விசாரித்தபோது, தேவியாக்குறிச்சி, இந்திரா காலனியை சேர்ந்த மணிவேல், 38, என்பதும், புத்துார் டாஸ்மாக் கடையில் இருந்து, 155 மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்க கடத்திச்சென்றதும் தெரிந்தது. மணிவேலை கைது செய்த போலீசார், பாட்டில்களுடன், கடத்த பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல் புங்கவாடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுப்ரமணி, 45, என்பவரை, ஆத்துார் ஊரக போலீசார் கைது செய்தனர். அவரிடம், 22 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை