மேலும் செய்திகள்
லாரி மோதி தொழிலாளி பலிமனைவி, குழந்தை படுகாயம்
15-Mar-2025
சங்ககிரி: சேலம் மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கம் சார்பில், சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிறுவனர் சுகுமார் தலைமை வகித்தார். அதில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு, சங்ககிரியில் உருவச்சிலை அமைக்க கோஷம் எழுப்பினர். அதில், 'நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் அறிவித்து வரும் ஆடி, 18க்குள், தீரன் சின்னமலை உருவச்சிலையை சங்ககிரியில் அமைக்க வேண்டும்' என்றனர்.இதில் சங்ககிரி வட்டார கொங்கு இளைஞர் சங்க தலைவர் ராமசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி, சங்ககிரி கொங்கு வட்டார அறக்கட்டளை தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜ் பிரிவு மாநில பொதுச்செயலர் சுவிதா உள்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது. இதில் சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி, சேலம், பனமரத்துப்பட்டி, ஆத்துார், தர்மபுரி, அரூர், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
15-Mar-2025