வெங்கட்ரமணர் கோவிலில் செப்., 4ல் கும்பாபிஷேகம்
ஓமலுார், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோவிலில், 2023ல் கும்பாபிஷேக திருப்பணி தொடங்கப்பட்டது. கருங்கல் தரைத்தளம், சுற்றுச்சுவர் புதுப்பித்தல், ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம், தாயார் சன்னதி ஆகியவற்றின் வண்ணபூச்சு முடிந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் வண்ணம் பூசும் பணி நடக்கிறது. கோவிலுக்கு செல்லக்கூடிய இரு வழிகளிலும், அலங்கார வளைவு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவில், உபயதாரர்கள் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன்(பொ) கூறுகையில், ''வரும் செப்., 4ல் கும்பாபி ேஷகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், ஆழ்வார் சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு பக்தர்கள் வசதியாக வந்து செல்லும்படி, தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது,'' என்றார்.