மேலும் செய்திகள்
மாநகராட்சியில் இன்று குடிநீர் 'கட்'
20-Aug-2025
சேலம், சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள குமரகிரி ஏரி, சீர்மிகு நகர திட்டத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புணரமைக்கப்பட்டது. அங்கு கரைகளை மேம்படுத்தி, பூங்கா, நடைபாதை, மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஏரியை சுற்றுலாத்தலமாக்க மேலும், 2.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, படகு இல்லம், இசை நீரூற்று, லேசர் ேஷா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.ஏரி நடுவே அமைக்கப்பட்டுள்ள லேசர் கம்பம் மூலம், நேற்று லேசர் ேஷா, முன்னோட்டமாக இயக்கப்பட்டது. பல வண்ணங்களில் மாறி மாறி, வானில் ஜாலம் காட்டிய லேசர் ேஷாவை, கமிஷனர் இளங்கோவன், கவுன்சிலர் தெய்வலிங்கம் உள்பட பலர் பார்வையிட்டனர்.
20-Aug-2025