உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒருக்காமலையில் சிறுத்தை? வனத்துறையினர் முகாம்

ஒருக்காமலையில் சிறுத்தை? வனத்துறையினர் முகாம்

சங்ககிரி, சங்ககிரி, ஒலக்கச்சின்னானுார், ஒருக்காமலை பகுதியில் அதிகளவில் மரங்கள் அடர்ந்துள்ளதால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அப்பகுதியை சில நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பர். இந்நிலையில் ஒருக்காமலை கோவில் அடிவாரத்தின், வடக்கு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை சென்றதாக, அப்பகுதி மக்கள் இடையே தகவல் பரவியது. தொடர்ந்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.இதனால் வன காப்பாளர் முத்துராஜா, வனக்காவலர் சந்தோஷ் ஆகியோர், நேற்று இரவு ஒருக்காமலையில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து வனவர் ரமேஷிடம் கேட்டபோது, '' சிறுத்தை காலடி தடம் எதுவும் பதியவில்லை. மக்கள் புகாரால், வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !