உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டை கொன்ற சிறுத்தை மற்றொரு ஆடு மாயம்

ஆட்டை கொன்ற சிறுத்தை மற்றொரு ஆடு மாயம்

மேட்டூர்; கொளத்துார், பாலமலை அடிவாரம், கண்ணாமூச்சி பீட் பகுதியில் ஒரு சிறுத்தை, சில வாரங்களாக சுற்றித்திரிவதோடு, வெள்ளாடு, நாய், பசுங்கன்றுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் கண்ணாமூச்சி ஊராட்சி நெடுஞ்செழியன் நகர், மேல்காடு விவசாயி பிரியா, 32, என்பவர், பட்டியில் அடைத்து வைத்திருந்த ஒரு வெள்ளாட்டை, சிறுத்தை கடித்து கொன்றிருந்தது. மற்றொரு ஆட்டையும் காணவில்லை. இதை நேற்று முன்தினம் அதிகாலை பார்த்து பிரியா அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து கண்ணாமூச்சி பீட் வன காப்பாளர் பத்ரன் உள்ளிட்ட வன ஊழியர்கள், வருவாய்த்துறையினர், சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். செட்டியூர் கால்நடை மருந்தக மருத்துவர் அண்ணாதுரை, இறந்த ஆட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். பின் ஆடு அப்பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.சிறுத்தை நடமாட்டத்தால், மலை அடிவார விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !