ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் ரத்து செய்ய பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கடிதம்
ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்திய -நாதன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா-வது:பெரியார் பல்கலையில், அண்மையில் ஆசிரியைகள் மற்றும் ஆசி-ரியர் என மூன்று பேருக்கு, பல்கலை பதிவாளர் விளக்கம் கோரும் கடிதத்தை அளித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, ஆரோக்கியமான சூழ்நி-லையை பாழ்படுத்தி விடும் என ஆசிரியர் சங்கம் கருதுகிறது. பணியிடை நீக்கம் என்பது நீண்ட காலம் தொடரக் கூடாது என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்கலையில், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது தவிர, பதவி உயர்வு காலத்திற்கான பண பலன்களை, பல்கலை வழங்க மறுத்து வரு-வது கண்டனத்துக்குரியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக அரசுக்கு ஆதாரத்துடன் சங்கம் வழங்கியுள்ளது. உதவி மற்றும் இணை பேராசிரியர் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி என்று முடிகிறதோ, அன்று முதல் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். முன் தேதியிட்டு வழங்கிய பதவி உயர்வு செல்லாது. இது குறித்து உள்ளாட்சி தணிக்கை துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆசி-ரியர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்டியலின ஆசிரியை பேராசிரியர் தகுதி பெற்றும், உதவி பேராசிரியரர் நிலையிலேயே தொடர்கிறார். பொருளியல் துறையில், அறக்கட்டளை மூலம் தங்கப்பதக்கம் வழங்கிட போதிய வட்டி நிதியில்லை என நிறுத்தியுள்ளது. இவ்-வாறு அதில் கூறப்பட்டுள்ளது.