உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை, சென்னைக்கு பறந்த கல்லீரல், சிறுநீரகம், இருதயம்

கோவை, சென்னைக்கு பறந்த கல்லீரல், சிறுநீரகம், இருதயம்

சேலம்:மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, சென்னை, கோவைக்கு அனுப்பப்பட்டன. சேலம் மாவட்டம், திம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 40. மனைவி லலிதா, 37, மகன் ஜீவா, 12, கனிஷ்கா, 8, உள்ளனர். பாலமுருகன், பந்தல் போடும் வேலை செய்து வந்தார். செப்., 3ல் பந்தல் போட வேனில் சென்றபோது தவறி விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை, அவர் மூளைச்சாவு அடைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்பத்தினர், பாலமுருகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி கல்லீரல், ஒரு சிறுநீரகம் பெறப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பப்பட்டது. அதற்கு, 'கிரீன் காரிடார்' என சாலையில் வசதி உருவாக்கப்பட்டு, உடல் உறுப்புகள் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டன. அதேபோல, இருதயம் பெறப்பட்டு, விமானம் மூலம், சென்னை தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கண்கள், இன்னொரு சிறுநீரகம் ஆகியவற்றை, சேலம் அரசு மருத்துவமனை தானமாக பெற்றுக்கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !