உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த பூசாரிப்பட்டி அருகே, பேளூர் பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்லும் நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் மதியம், 1:10 மணிக்கு சேலம் புவி-யியல் மற்றும் சுரங்கத்துறை தனி தாசில்தார் (கனிமம்) ராஜ்-குமார், 41, தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்த-போது, சட்ட விரோதமாக 3 யூனிட் செம்மண் கடத்தியது தெரிய-வந்தது. அப்போது, லாரி டிரைவர் தப்பி சென்றார். இதையடுத்து, செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் அனுப்பூரை சேர்ந்த மணிகண்டனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி