உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் சொர்ண துர்க்கை அம்மனுக்கு மஹா சண்டி யாகம்

சுகவனேஸ்வரர் சொர்ண துர்க்கை அம்மனுக்கு மஹா சண்டி யாகம்

சேலம், உலக நன்மைக்காக, சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று (அக்.,2) மஹா சண்டி யாகம் நடக்கிறது.சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சொர்ணாம்பிகை அம்மனுக்கு நவராத்திரியையொட்டி, கடந்த ஒன்பது நாட்களாக தினசரி மாலை சிறப்பு அலங்கார பூஜை, வாய்ப்பாட்டு, நடனம், இசை கச்சேரி நடத்தப்பட்டது.விழாவின் நிறைவாக இன்று கோவிலில் 'சொர்ண துர்க்கை' அம்மனுக்கு அவரது சன்னதி முன்பாக உலக நன்மை வேண்டி, 108 முலிகைகள், பழங்கள், பூக்கள், வஸ்திரங்களை கொண்டு மஹா சண்டி யாகம் நடக்கிறது.விஜயதசமியான இன்று காலை, 7:30 மணிக்கு சண்டி யாகம் துவங்கி மதியம், 12:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவடையும். சண்டி யாகத்தில் கலந்து கொள்வது, அதற்கு தேவையான பொருட்களை வழங்குவதால், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலகம் முழுவதும் போர்கள் இன்றி சமாதானமாக வாழ வேண்டி மஹா சண்டி யாகம் நடத்தப்படுவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை