உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மகா தீபம் ஏற்றப்படும்

சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மகா தீபம் ஏற்றப்படும்

சுகவனேஸ்வரர் கோவிலில்இன்று மகா தீபம் ஏற்றப்படும்சேலம், டிச. 13-கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று காலை, 6:00 மணிக்கு, மூலவர் சுகவஸேஸ்வரர் சுவர்ணாம்பிகை அம்மனுக்கு, பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபி ேஷகம், அலங்காரம், ஆராதனை உள்ளிட்ட வைபவம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, பின் மூலவர் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, பூஜைக்கு பின் உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், சண்முக சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வெளி பிரகாரத்தில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி முடிந்த பின், கோவில் முன்புள்ள, 2 தீப துாண்களில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம், தொடர்ந்து இரு நாட்கள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்றப்பட்ட பின் சோமாஸ்கந்தர், சண்முகர் திருவீதி உலா நடக்கிறது. பக்தர்கள் மகா தீப விழாவில் பங்கேற்க, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.திருவிளக்கு பூஜைஇளம்பிள்ளை பாலசுப்ரமணியர் கோவிலில், இன்று காலை, 10:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி சிறப்பு யாகத்துடன் திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதேபோல் காளிப்பட்டி கந்தசாமி, ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன், வேலநத்தம் பாவடி காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர், சென்னகிரி இருசனம்பட்டி மருந்தீசர் உள்ளிட்ட கோவில்களில் திருக்கோடி தீபம் ஏற்றி சொக்கப்பனை எரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை