உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

வாழப்பாடி; வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பொன்ராமன், 65. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், 37, அவரது மனைவி கோமதி, 35, ஆகியோர் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இதில் கடந்த, 9ல் வாக்கு-வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தம்பதியர், பொன்-ராமனை தாக்கினர்.காயம் அடைந்த அவர், வாழப்பாடி அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்-படி, வாழப்பாடி போலீசார் விசாரித்து, நேற்று பாக்கியராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !