மினி பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
சேலம்: கருப்பூர் அருகே நாரணம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 36. இவர் ஓமலுார்-செங்கரடு செல்லும் தனியார் மினி பஸ் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில் செங்கரடில் இருந்து பயணிகளுடன், ஓமலுார் சென்று கொண்டிருந்தபோது, ஊத்து ஓடை பால் சொசைட்டி அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சீனிவாசன், 35, என்பவர் மது போதையில் நடு ரோட்டில் பாதையை மறித்து நின்றுள்ளார்.அவரை மீறி பஸ்சை ஓரமாக திருப்பி, கடந்து செல்ல முயன்ற போது, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் மினி பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கருப்பூர் போலீசார் விசாரித்து, நேற்று சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.