மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
18-Sep-2025
சங்ககிரி “ சங்ககிரியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 61. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் பிரசாந்த், 29, மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். பாலகிருஷ்ணனுக்கு, சங்ககிரியில் புதிய இடைப்பாடி சாலையை சேர்ந்த ஜெயகாந்தன், 45, என்பவர் அறிமுகமானார். இவர் தனது நண்பரான பூலாம்பட்டியை சேரத்த பிரேம்குமார், 47, என்பவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதால், உங்கள் மகன் பிரசாந்திற்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பாலகிருஷ்ணனிடம், 2019ல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய பாலகிருஷ்ணன், மூன்று தவணைகளாக, 13 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாயை பிரேம்குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் இதுநாள் வரை அரசு வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணன், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், ஜெயகாந்தன், பிரேம்குமார் ஆகியோர் என்னை ஏமாற்றி பெற்ற, 13 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாயில், 12 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.சங்ககிரி போலீசார் நேற்று முன்தினம் விசாரித்து, பணமோசடி செய்த பிரேம்குமாரை கைது செய்தனர். ஜெயகாந்தனை தேடி வருகின்றனர்.
18-Sep-2025