மேலும் செய்திகள்
மொபைல்போன் திருட்டு: வாலிபர் கைது
01-May-2025
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, 19 வயது பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிடவே, அந்த நபர் தப்ப முயன்றார். அந்த வழியே சென்றவர்கள், அவரை பிடித்து பெண்ணிடம் கேட்டபோது, அவர் தவறாக நடந்துகொண்டது தெரிந்தது. பின், பாதிக்கப்பட்ட பெண், அந்த நபரை, காலணியால் தாக்கினார். மக்களும் தர்ம அடி கொடுத்தனர். பின் அந்த நபரை, சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், அரிசிபாளையத்தை சேர்ந்த சண்முகநாதன், 44, என்பதும், டவுனில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிவதும் தெரிந்தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.
01-May-2025