போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது
சேலம்: வீராணம் போலீசார், அல்லிக்குட்டையில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த, பழைய சூரமங்கலத்தை சேர்ந்த, மணிகண்டன், 30, என்பவரிடம் விசாரித்தனர். அவர், 34 போதை மாத்திரைகளை விற்க வைத்திருந்ததும், அதை திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதும் தெரிந்தது. மணிகண்டனை கைது செய்த போலீசார், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடையவரையும், போலீசார் தேடுகின்றனர்.