உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாத்தா உள்ளிட்ட 4 பேரை கத்தியால் குத்தியவர் கைது

தாத்தா உள்ளிட்ட 4 பேரை கத்தியால் குத்தியவர் கைது

வாழப்பாடி, வாழப்பாடி அருகே, தாத்தா உள்ளிட்ட நான்கு பேரை கத்தியால் குத்திய, பட்டதாரி வாலிபரான பேரனை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பள்ளத்தாதனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 30. பி.இ., பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு பள்ளத்தாதனுார் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தனது தாத்தா கணேஷ், 75, வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது, கணேஷை, அருண்குமார் தாக்கியுள்ளார். கணேஷ் அலறல் சத்தம் கேட்டு, அவ்ழியாக சென்ற மூன்று பேர் தடுக்க முயன்றனர். ஆத்திரமடைந்த அருண்குமார், தடுக்க முயன்ற மூன்று பேர் மற்றும் கணே ைஷ கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்துக்கு வாழப்பாடி போலீசார் சென்றதும், அங்கிருந்து அருண்குமார் தப்பினார். தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, நள்ளிரவில் அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ