உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடுப்பு வெடித்ததில் தீக்காயம் அடைந்தவர் பலி

அடுப்பு வெடித்ததில் தீக்காயம் அடைந்தவர் பலி

ஆத்துார், ஆத்துார், மேற்குராஜாபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி ஜிதேந்திரா. இவரது மனைவி வெண்ணிலா, 35. இவர் கடந்த, 23ல், வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பு வெடித்து, மண்ணெண்ணெய் வெண்ணிலா உடல் முழுதும் சிதறி தீப்பிடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !