மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
31-Mar-2025
நுங்கு பறிக்க பனை மரம் ஏறிய தொழிலாளி பலி
03-Apr-2025
இடைப்பாடி:இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் பனைமரம் ஏறிய இளைஞர், தேனீக்கள் கொட்டியதில் தவறி விழுந்து இறந்தார்.இடைப்பாடி, கவுண்டம்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அருண்குமார், 23. முதுநிலை பட்டதாரியான இவர், கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள, பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக காலை, 9:00 மணிக்கு ஏறியுள்ளார். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் கொட்டியதில், மரத்தில் இருந்து அருண்குமார் கீழே விழுந்துள்ளார். இதில் அருண்குமாருக்கு உடல், தலை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.இடைப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
31-Mar-2025
03-Apr-2025