உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவேரி மருத்துவமனை நடத்திய மாரத்தான்;6,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

காவேரி மருத்துவமனை நடத்திய மாரத்தான்;6,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலம்:'இதய ஆரோக்கியத்திற்காக ஓடுவோம்' தலைப்பில், சேலம் காவேரி மருத்துவமனை நடத்திய, 5ம் ஆண்டு மாரத்தான் போட்டி, சேலம் காந்தி மைதானத்தில், நேற்று நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, 21.1 கி.மீ., போட்டியை, காவேரி மருத்துவமனை பெசிலிட்டி இயக்குனர் செல்வம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.தொடர்ந்து ஆண்கள், பெண்கள் ஓடத்தொடங்கினர். அஸ்தம்பட்டி வழியே ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியை கடந்து, திரும்ப வளைந்து, அஸ்தம்பட்டி, ராமகிருஷ்ணா சாலை, 4 ரோடு வழியே மீண்டும் காந்தி மைதானத்தை அடைந்தனர். அதேபோல், 5:30 மணிக்கு, 10 கி.மீ., ஓட்டத்தை, ஏ.எஸ்.பி., சுபாஷ் சந்த் மீனா, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அஸ்தம்பட்டி வழியே கோரிமேடு சென்று திரும்பி, மீண்டும் அஸ்தம்பட்டி வழியே, ராமகிருஷ்ணா பார்க், 4 ரோடு வந்து, காந்தி மைதானத்தை அடைந்தனர். காலை, 7:00 மணிக்கு, 5.5 கி.மீ., ஓட்டத்தில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஓடினர். அஸ்தம்பட்டி சென்று ராமகிருஷ்ணா வழியே, 4 ரோடு வந்து, மீண்டும் காந்தி மைதானத்தை அடைந்தனர்.இதுகுறித்து, காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், 'இது வெறும் ஓட்டம் அல்ல. ஆரோக்கிய வாழ்க்கைக்கான திருவிழா. ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க, எங்கள் பயணம் தொடரும். இந்த மாரத்தானில் பங்கேற்ற, 6,500க்கும் மேற்பட்ட அனைவரும், வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியத்தின் துாதுவர்களாக கொண்டாடப்பட்டனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி