மாரியம்மன் திருவிழா ஆக., 6ல் உள்ளூர் விடுமுறை
சேலம், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆக., 6 அன்று, உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்க, மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஆக., 23ல், பணி நாளாக செயல்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.