மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடியில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன், செல்லியம்மன் கோவில்களில், கடந்த, 21ல் காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று, மகா மாரியம்மன் தேர் அலங்கரிக்கப்பட்டு அம்மனை எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, 'ஓம் சக்தி பராசக்தி' கோஷத்துடன், ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்றனர். இரவு, 7:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.