வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செய்தியை முந்தித் தருவதில் தினமலர் முதல் இடத்தில் இருக்கிறது.. உதாரணம்...நேற்று 21.04.2025 மருத்துவ கல்லூரி மாணவர் இறப்பு சம்பவம்....இவர் என் உறவினர். மேலும் செய்தியில் உண்மைத் தன்மை மேலோங்கி இருக்கிறது.. நன்றி..
சேலம்:சேலம் மாவட்டம், ஆத்துார் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேடியப்பன், 50. இவர், ஆத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி செல்வி, அதே பள்ளியில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். இவர்களது மகன் அனிஸ், 23, சேலம் அரியானுார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்.. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது.நேற்று அதிகாலை திடீரென அனிஸ்க்கு, ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதித்து, தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூச்சுத்திணறலுடன் மாரடைப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே மாணவன் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார், விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊரான, தர்மபுரி அருகே குருபரஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. மது அருந்தியதால் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி மாணவன் உயிரிழப்பால், சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியை முந்தித் தருவதில் தினமலர் முதல் இடத்தில் இருக்கிறது.. உதாரணம்...நேற்று 21.04.2025 மருத்துவ கல்லூரி மாணவர் இறப்பு சம்பவம்....இவர் என் உறவினர். மேலும் செய்தியில் உண்மைத் தன்மை மேலோங்கி இருக்கிறது.. நன்றி..