உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50 ஆண்டுக்கு முன் படித்தவர்கள் சந்திப்பு

50 ஆண்டுக்கு முன் படித்தவர்கள் சந்திப்பு

ஓமலுார்: சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 1975ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 50ம் ஆண்டு விழாவாக, நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் கீதா(பொ) தலைமை வகித்தார். அதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்னாள் மாணவர்கள், அவர்களது குடும்பத்துடன் பங்கேற்று, ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 'வால்வோ' நிறுவன நிர்வாக இயக்குனர் கமல்பாலி, சங்கத்தலைவர் சுதாகர், செயலர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை