உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ரயில் இன்ஜினில் அடிபட்டு பலி

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ரயில் இன்ஜினில் அடிபட்டு பலி

ஆத்துார் :ஆத்துார், துலுக்கனுார் ஊராட்சி இந்திரா நகர் வழியே, சேலம் - விருதாச்சலம் அகல ரயில் பாதை செல்கிறது. அந்த வழியே நேற்று காலை, 6:30 மணிக்கு, மூதாட்டி ரயில் பாதையை கடக்க முயன்றனார். அப்போது விருதாச்சலத்தில் இருந்து, சேலம் நோக்கி வந்த ரயில் இன்ஜின் மோதியதில், மூதாட்டி உடல் சிதறி உயிரிழந்தார். விசாரணையில், ஆத்துார் அருகே புங்கவாடியை சேர்ந்த மணிகண்டன் மனைவி சின்னம்மாள், 50, என்பதும், மன நிலை பாதிக்கப்பட்ட அவர், 3 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிந்தது. சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !