மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து 7,460 கன அடியாக உயர்வு
16-Dec-2024
மேட்டூர்: நடப்பாண்டில், 3ம் முறையாக மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த ஜூலை, 30ல், மேட்டூர் அணை நடப்பாண்டில் முதல்முறையாக நிரம்பியது. அதேபோல் ஆக., 12ல் இரண்டாம் முறை அணை நிரம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம், 119.12 அடியாக இருந்த நீர்மட்டம், 119.22 அடியாக நேற்று சற்று உயர்ந்தது. இதனால் உபரிநீர் வெளியேற்றும், 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் நிரம்பி ததும்புகிறது.நடப்பாண்டில் மூன்றாம் முறையாக நிரம்ப, 1 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. நேற்று அணை நீர்வரத்து, 2,886 கன அடியாக இருந்தது. குடிநீர் மற்றும் கால்வாய் பாசன தேவைக்கு, 800 கன அடி நீர் திறக்கப்பட்டது.
16-Dec-2024