உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து 20,255 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 20,255 கனஅடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த, 26ல் அதிக-பட்சம் வினாடிக்கு, 33,148 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்-தினம் வினாடிக்கு, 30,475 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 20,255 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,500 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டது. நீர் திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 106.48 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 107.54 அடி-யாக உயர்ந்தது. கடந்த, 15 நாட்களில் அணை நீர்மட்டம், 18 அடி, நீர் இருப்பு, 22 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ