மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து 7,769 கனஅடியாக சரிவு
06-Aug-2025
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை குறைந்தது.இதற்கேற்ப கடந்த, 13ல் வினாடிக்கு, 15,040 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 14ல், 9,263 கன அடி; நேற்று முன்தினம், 6,767 கனஅடி; நேற்று, 6,408 கனஅடி என, படிப்படியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 10,000 கனஅடி, கால்வாயில், 500 கனஅடி என, 10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 118.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று, 118.51 அடியாக சரிந்தது.
06-Aug-2025