மேலும் செய்திகள்
மீண்டும் சரிய தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்
01-Nov-2024
மீண்டும் சரிய தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்
01-Nov-2024
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவ மழையால், கடந்த அக்., 22ல், 98.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், மறுநாள் நடப்பாண்டில், 2ம் முறையாக, 100.01 அடியாக உயர்ந்தது. 30ல் நீர்மட்டம் அதிகபட்சமாக, 108.50 அடியாக உயர்ந்தது. பின் நீர்மட்டம் சரியத்தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,992 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 5,451 கன அடியாக சற்று அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு, 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு குறைவாக இருந்தபோதும் நேற்று முன்தினம், 106.10 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.07 அடியாக குறைந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கைகொடுத்த பருவ மழையால், 3 வாரங்களாக மேட்டூர் அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் நீடிக்கிறது.
01-Nov-2024
01-Nov-2024