உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மேட்டூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மேட்டூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மேட்டூர் : மேட்டூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.மேட்டூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (இயக்கம், பராமரிப்பு) வனிதா அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி, வினியோக கழக மேட்டூர் மின் பகிர்மான வட்டம், மேட்டூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (செப்.,24) காலை, 10:30 மணிக்கு மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் மின் குறைபாடு தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ