உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பத்ரகாளியம்மனுக்கு பால் அபிேஷகம்

பத்ரகாளியம்மனுக்கு பால் அபிேஷகம்

மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், 2013 ஜன., 23ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதன், 12ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 108 சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சாம்ராஜ்பேட்டை ஆதிபராசக்தி மன்றத்தில், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில், ஏராளமான பெண் பக்தர்கள், பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக, பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிேஷகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம், சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர்கள், பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை