உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கனிம நிறுவன ஓய்வு தொழிலாளர்கள் நிலுவை பணப்பலன் கேட்டு போராட்டம்

கனிம நிறுவன ஓய்வு தொழிலாளர்கள் நிலுவை பணப்பலன் கேட்டு போராட்டம்

மேட்டூர், மேட்டூர், எலிகரடு மலைப்பகுதியில், தமிழக கனிம நிறுவனம் சார்பில், 1979ல் குவாரி தொடங்கப்பட்டது. அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற, 20 தொழிலாளர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, ஐ.என்.டி.யூ.சி., மாநில பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், குவாரிக்கு செல்லும் சாலை குறுக்கே நின்று, நிலுவைத்தொகையை அரசு வழங்க கோரிக்கை விடுத்தனர். மேட்டூர் கோட்ட கனிம நிறுவன செயலர் மாரிமுத்து, சி.ஐ.டி.யு., தலைவர் ஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூறியதாவது:இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற, 86 தொழிலாளர்களுக்கு, 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள நிலுவை தொகை வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உயர்த்தும் பஞ்சப்படியும், இன்னும் வழங்கப்படாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. 2018 முதல், 2025 வரை கனிம நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்ற, 50 தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய பணப்பலன்களும் வழங்கப்படவில்லை. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை