பாக முகவர், பூத் கமிட்டி கூட்டம் தி.மு.க.,வினருக்கு அமைச்சர் அழைப்பு
பாக முகவர், பூத் கமிட்டி கூட்டம்தி.மு.க.,வினருக்கு அமைச்சர் அழைப்புசேலம், நவ. 7-தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:சேலம் வடக்கு, தெற்கு, ஓமலுார் சட்டசபை தொகுதிகளுக்கு பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட்டம் வரும், 8ல்(நாளை) தொடங்கி, 5 நாட்கள் நடக்கின்றன. தொகுதி பார்வையாளர்கள் முறையே இளங்கோவன், சுகவனம், டாக்டர் விவேக் தலைமையில் கூட்டம் நடக்கும். அதன்படி தெற்கு தொகுதியில், 8ல், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, குகை, கொண்டலாம்பட்டி பகுதிக்கு கூட்டம் நடக்கும்.வரும், 9ல் வடக்கில் கன்னங்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, அஸ்தம்பட்டி, 10ல் பொன்னம்மாபேட்டை, அரிசிபாளையம், குமாரசாமிப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளுக்கு கூட்டம் நடக்க உள்ளது.அதேபோல், 11ல் ஓமலுாருக்கு உட்பட்ட பண்ணப்பட்டி, கூ.குட்டப்பட்டி, பூசாரிப்பட்டிக்கு பண்ணப்பட்டியிலும், காடையாம்பட்டி பேரூர், நடுப்பட்டி, தீவட்டிப்பட்டி, குண்டுக்கல் பகுதிகளுக்கு காடையாம்பட்டியிலும், பொம்மியம்பட்டியில்,வேப்பிலை உப்பிளிக்கம்பட்டி, பொம்மியம்பட்டிக்கும், பெரியவடகம்பட்டியில் கணவாய்புதுார், டேனிஷ்பேட்டைக்கான கூட்டமும், கஞ்சநாயக்கன்பட்டியில் தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டிக்கான கூட்டமும், காருவள்ளியில் செம்மாண்டப்பட்டி, மூக்கனுார், கொங்குப்பட்டி, காருவள்ளிக்கான கூட்டமும் நடக்க உள்ளது. தவிர, 12ல் செவ்வாய் சந்தை சமுதாயக்கூடத்தில் ஓமலுார் கிழக்கு ஒன்றியம், ஓமலுார் பேரூர் கூட்டமும், பல்பாக்கி சமுதாய கூட்டத்தில் ஓமலுார் வடக்கு ஒன்றிய கூட்டமும், மல்லிக்குட்டை சமுதாய கூடத்ததில் தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய கூட்டமும், ஏ.சி.எஸ்., திருமண மண்டபத்தில் ஒமலுார் தெற்கு ஒன்றிய கூட்டமும் நடக்க உள்ளது.