மேலும் செய்திகள்
மாம்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு
09-Sep-2025
ஓமலுார், ஓமலுார், எட்டிக்குட்டை ஊராட்சி மாட்டுக்காரனுாரில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மக்களில் சிலருக்கு, பொருட்களை வழங்கினார். தொடர்ந்து இந்திரா நகரில் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார். அதேபோல் கருப்பூர் டவுன் பஞ்சாயத்து, 1வது வார்டில், புதிதாக கட்டப்பட்ட நுாலகம், செலவடை ஊராட்சியில் பச்சாக்கவுண்டனுார், வெண்ணாம்பட்டி, அரியாம்பட்டி, பச்சனம்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட, 4 ரேஷன் கடைகள் உள்பட, 54.70 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளை, அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, ஓமலுார் ஒன்றிய செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
09-Sep-2025